சல்லு கல்லு மல்லு

ஏண்டி சாயப் பொடி பூச்சுக்காரி, உன்னோட அக்காவுக்கு மொத பிரசவத்திலேயே மூணு கொழந்தைங்க பொறந்திருக்குதாமே?

😊😊😊😊

ஆமாங்க பாட்டிம்மா. மூணும் அழகான பையன்கள்.

😊😊😊😊

பசங்களா. ரொம்ப சந்தோசம்டி முத்துகனி. அக்காவும் கொழந்தைகளும் நல்லா இருக்கறாங்களா?

😊😊😊😊

நலமா இருக்கறாங்க பாட்டிம்மா.

😊😊😊😊😊

சரி. கொழந்தைங்களுக்குப் பேரு வச்சிருப்பாங்களே அவுங்க பேருங்களச் சொல்லுடி முத்துகனி.

😊😊😊😊😊

நீங்கதான் பெரிய பெயராய்வு மூத்த குடிமகள் ஆச்சே. உங்களுக்கு பேருங்களோட அர்த்தத்தை தெரிஞ்சுக்காம விட்டா உங்க தலை வெடிச்சிடுமே.

😊😊😊😊

சரி சொல்லுடி மழுப்பாம.

😊😊😊😊😊

ஒரு பையன் பேரு ஜல். இன்னோரு பையன் பேரு கல். மூணாவது பையன் பேரு மல்.

😊😊😊😊

என்னடி அநியாயம் இது. சல்லு, கல்லு, மல்லு. இதெல்லாம் பேருங்களா?

😊😊😊😊😊

பாட்டிம்மா நீங்க உங்க பிள்ளைப் பருவத்திலே இருக்கறதா நெனச்சுட்டு இருக்கிறீங்க. இப்பெல்லாம் பிள்ளைகளுக்கு தமிழ்ப் பேருங்கள வச்சா யாருமே மதிக்கமாட்டாங்க. வேற மொழிப் பேருங்கள வச்சுக்கறதுதான் தமிழர்களின் தற்போதைய நாகரீகம்.

😊😊😊😊😊

சரீடி போடி. அந்த சல்லு, கல்லு, மல்லுக்கு அர்த்தம் கேட்டா "எனக்குத் தெரியாது"ன்னு நீ சொல்லுவ. நாளைக்கு இந்தி ஆசிரியர் தமிழரசுகிட்ட நாங் கேட்டுத் தெரிஞ்சுக்கறேன். நீ போயிட்டு வாடி ஆத்தி.

😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■

சிரிக்க அல்ல. சிந்திக்க.

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■

Jal = murmuring, tarrying

Kal = supplant

Mal = messenger of God, angel.


Close (X)

5 (5)
  

மேலே