சுதந்திரம்

பாரதத்தை
படையெடுத்த
பரங்கியரின்
பாவசிறையிலிருந்து....

பாரதத்தை மீட்க ....

அந்நியரின்
ஆதிக்கம் ஒழித்து
அடிமைத்தளைகளை தகர்த்து .....
ஆங்கிலேயரின்
சர்வாதிகாரதிருக்கு
முடிவுகட்ட ....

இந்திய மண்ணை
இந்தியனே ஆள...

இங்கே வாணிபம் மேற்கொண்ட
அந்நியன் வீழ !....

ஆகாயமே வியக்க
அனைவரும் வெகுண்டு
அண்ணலின்
அகிம்சையை பின்பற்றி
அந்நியரின்
இம்சையிலிருந்து
பாரதத்தை மீட்க

புரட்சியின் மூலமாக
மகிழ்சியை உருவாக்கிட

விடுதலை வேட்கையால்
தாகம் கொண்ட
அக்னிக்குஞ்சுகள்
ஒன்றுபட்டு .....

குருதி சிந்தி
குருடான
இந்திய மண்ணிலே
ஒளி வீசிட
சுதந்திர காற்று
இந்திய மண்ணோடு
பேசிட ....

வெள்ளையனே
வெளியேறு......

என்று முழக்கமிட்டு
அங்கே
இந்தியன்
என்னும் தத்துவத்தை
அழியாத சமத்துவத்தை
உதிர்த்தான் பயனாகவே
தோன்றியது.....

சுதந்திரம்
என்னும் கவிதை......

கார்த்தி....

எழுதியவர் : எழில்கார்த்தி (27-Jul-11, 3:53 pm)
சேர்த்தது : ezhilkarthi
பார்வை : 430

மேலே