கண்ணே கண்மணியே

கண்ணே கண்மணியே
கண்ணால் பேசுறியே
உன்பின்னால் நான் வந்தால்
கனலாய் வீசுறியே
உன் நேசம் சொல்லாமல்
என் பாசம் கேக்குறியே
என் சுவாசம் நீ என்றால்
நம்பிட மறுக்கிறியே ....

என் உள்ளம் உருக வைத்து
காதலால் கிறங்க வைத்து
கொஞ்சம் கவிதை புலம்பவிட்டு
என்னை தனிமையில் வாட்டுவதேன் ???
என் செல்லம் நீ என்று
மனத்தால் நினைத்து கொண்ட
ஒரு தலை காதலினை
சிறிது மறுக்கிறியே
என்னை வாட்டி வதைக்கிறியே

நீ தாரமாய் வருமுன்னே
மனத்தால் வாழ்ந்துவிட்டேன்
என்னை பாரமாய் நீ நினைத்தால்
நம் காதல் மரித்திடுமே
நீ என் நினைவில் இருக்கும்வரை
என் கனவுகள் சிதைவதில்லை
உன் காதல் சொல்லும் வரை
நம் காதல் அழிவதில்லை

எழுதியவர் : ருத்ரன் (19-Oct-17, 9:27 pm)
Tanglish : kanne kanmaniye
பார்வை : 159

மேலே