பெயர் ஏலம்

என்ன தம்பி அங்க நெறையப் பேரு வரிசையா நிக்கறாங்க?
😊😊😊😊😊
அய்யா அவங்கெல்லாம் ஏலம் எடுக்க வந்தவங்க.
😊😊😊😊😊
என்ன தம்பி சொல்லற. ஒண்ணும் புரில.?
😊😊😊😊😊😊😊
அவுங்க ஒரு கட்டடத்துக்கு முன்னாடி நிக்கறாங்க இல்லையா? கட்டடத்தின் மேலே உள்ள பெயர் பலகையைப் பாத்தீங்களா?
😊😊😊😊😊
ஆமாம். பிறமொழிப் பெயர் ஆய்வு மற்றும் விற்பனை மையம் -ன்னு போட்டிருக்கு. சரி இங்க எதை ஏலம் விடப்போறாங்க?
😊😊😊😊😊
பேருங்களத்தாங்க அய்யா.
😊😊😊😊😊
பேருங்களக்கூடவா ஏலம் விடறாங்க?
😊😊😊😊😊
ஆமாங்கய்யா. இப்ப தமிழர்கள் எங்கெல்லாம் வாழறாங்களோ அவுங்கள்ல 95% தமிழர்களுக்கு மேல அவுங்க பிள்ளைங்களுக்கு இந்தி, சமஸ்கிருதப் பேருங்க, அதில்லாம பலர் இந்திப் பேருன்னு நெனச்சுட்டு எந்த மொழிலயும் இல்லாத பேருங்கள வச்சிடறாங்க. சில பெற்றோர்கள் பிள்ளைங்களுக்குப் பேரத் தேர்வு செய்யத் தடுமாறிப் போறாங்க. அவுங்க குறையைத் தீர்க்கத்தான் இந்த மையம். ஏலம் வாரத்துக்கு ஒரு நாள் நடக்கும். இன்னிக்கு காலைல மணி 10 லிருந்து மாலை 5 மணி வரைக்கும் நடக்கும். இந்தப் பையன்களும் பொண்ணுங்களும் காலைல ஆறு மணிலிருந்தே காத்திட்டு இருக்கறாங்க. அவுங்களோட அக்காமார்கள், அண்ணன்மார்கள் அத்தைமார்கள் மாமாமார்கள் ஆகியோருக்காக வரிசையில எடம் பிடிச்சு நிக்கறாங்க.
😊😊😊😊😊😊
சரி பேருங்கள எப்படி ஏலம் விடுவாங்க?
😊😊😊😊😊
சரியா பத்து மணிக்கு ஒவ்வோரு பேரா ஒலி பெருக்கில அறிவிப்பாங்க. அந்தப் பேரை யார் அதிகத் தொகைக்கு எடுக்கறாங்களோ அவுங்களுக்கே அந்தப் பேர வித்திடுவாங்க. போன வாரம் நானும் எங்க அண்ணனும் ஏலத்துக்குப் போயிருந்தோம். பூவிஷா, காவிஷா, மோவிஷா -ன்னு அர்த்தம் இல்லாத பேருங்கெல்லாம் பத்தாயிரம் ரூபாய்க்கு ஏலம் போச்சு.
😊😊😊😊😊😊
அடேங்கப்பா! பேருங்கள ஏலத்தில எடுக்கற அளவுக்கு நம்ம தமிழர்கள் வந்துட்டாங்க. பிறமொழிப் பேருங்களுக்கு சிந்தும்பாத்து.


■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
சிரிக்க அல்ல. சிந்திக்க. திரை மோகத்திலும் பிறமொழிப் பெயர் மோகத்திலும் மூழ்கிக் கிடப்போரை தமிழ்க் கரைக்குக்கு வர அன்புடன் அழைக்கிறேன்

■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■■
பூவிஷா என்ற பெயரை கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் என்ற ஊர்ப்பகுதியில் உள்ள கடையொன்றின் பெயர்ப் பலகையில் பார்த்தேன்.

எழுதியவர் : மலர் (22-Oct-17, 12:22 am)
பார்வை : 342

சிறந்த நகைச்சுவைகள்

மேலே