சூரசம்ஹாரம் நடந்தது திருச்செந்தூரிலா கதிர்காமத்திலா

அரக்கன் சூரபத்மனை வதம் செய்த தலம் கதிர்காமமா அல்லது திருச்செந்தூரா என்ற கேள்வி பலர் மத்தியில் உள்ளது. அரக்கர்களை அழிக்க அவதரித்த கந்தனின் அவதார நோக்கம் நிறைவேறிய தலம் இந்த திருச்செந்தூர். அதேவேளையில் இலங்கையில் இருந்த சூரபத்மனை அழிக்க ஏமக்கூடத்தில் படை வீடு அமைத்ததால் கதிர்காமம் முருகனின் புனிதத் தலங்களில் ஒன்றாக வணங்கப்படுகிறது.

தேவர்களை அடிமைப்படுத்தி மக்களை வதைத்த தகராசுரன் மற்றும் சூரபத்மனை வதம் செய்ய அவதரித்தார் முருகப் பெருமான். சூரபத்மனை அழிக்க திருச்செந்தூர் வந்த முருகன் சூரபத்மனின் கதையை குருபகவானிடம் கேட்டறிகிறார். பிறகு இறுதி வாய்ப்பாக நவ விரர்களுள் ஒருவரான வீரவாகுவை தூதாக சூரபத்மனிடம் அனுப்புகிறார்.

கடல் கடந்து செல்லும் வீரவாகு சூரபத்மனின் தீவான வீரமகேந்திர புரத்தை அடைகிறார். அங்கு முருகனிடமிருந்து தான் கொண்டு வந்த செய்தியைக் வீரவாகு கூறியும், அடிபணியாத சூரபத்மன் போருக்குத் தயாராகிறான்.

முருகப் பெருமானைப் போருக்கு அழைத்தான் சூரமபத்மன்.

ஆணவம் குறையாத சூரபத்மனை அழிக்க தன் படையுடன் வீரமகேந்திரம் புரம் அடைந்தார் முருகன். ஆறு நாள் கடுமையான போரில் போரில் அனைத்தையும் இழந்த சூரபத்மன் சரணடைய மறுத்து கடலில் ஒழிந்துக் கொள்கிறான்.

ஆறாம் நாள் மாமரமாக உருவெடுக்கும் சூரபத்மனை ஏமகூடத்தில் தன் வேலால் இரண்டாக பிளந்தார் முருகன். இங்கே ஏமகூடம் என்று கூறப்படும் இடம்தாம் கதிர்காமம் அல்லது கதிர மலை. சூரசம்ஹாரத்திற்குப் பிறகு வீர மகேந்திரபுரம் கடலில் அமிழ்ந்துவிடுகிறது.

தன் படையுடன் முருகப்பெருமான் திருச்செந்தூர் வந்தடைகிறார். அங்கு சிவலிங்க மூர்த்தியை வணங்கி பூஜித்தார்.

சூரனை வதம் செய்த இடம் தற்போதைய கதிர்காமம். அதேவேளையில் தன் அவதார நோக்கத்தை முருகப் பெருமான் பூர்த்தி செய்ய, இந்த சம்ஹார வெற்றியை தேவர்கள் அனைவரும் கொண்டாடிய பரம புண்ணியத் தலம் திருச்செந்தூர்.

ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதத்தில் வரும் கந்த சஷ்டி அன்று திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் நடந்தேறும்.

எழுதியவர் : (26-Oct-17, 10:48 am)
சேர்த்தது : ராஜ்குமார்
பார்வை : 397

சிறந்த கட்டுரைகள்

மேலே