உயிரை பிரிந்தவனே
நித்தமும் நிலவின் முன்னால் நிலவுதான் நீயென உரைத்தவனே
அந்த விண்ணையும் தாண்டி விசாலமானது என் காதல்
என்றாயே
கண்ணை மூடினேன் கனவே நீயென உரைத்தாயே
காலம் முழுக்க - உன்
கடைகண் பார்வையொன்றே போதும் என்றவனே!
என் காதலா உன் எங்கே?
ஒரு மாற்றாளின் மாராப்பில் மறைந்து போனதோ?
அன்னியளின் அருகாமையில் அடங்கிவிட்டதோ?
உனக்காக மட்டும் என்று வாழும் உயிரைக் கொன்றுவிட்டாயே
உனக்காய் கட்டிய காதல் கோட்டையை
வேசக்காதல் கணைகள் கொண்டு உடைத்து விட்டாயே
உன் காதலைவிட என் காதல் புனிதமானது என்பதை - நீ
உணர்வாய் உன் காதல் தோற்க்கும் போது
உன் உயிரை பிரிந்தவன் நீயென்று.