நிழல்
காதலென்று
கண்மூடி தவமிருந்தேன்;
காயமாய்
மனமெல்லாம் வலிக்குதுடா;
உண்மையென்று
இன்பத்தில் களித்திருந்தேன்;
கனவாக
களைந்து தான் போனாயடா;
உயிரென்று
உனையே நினைத்திருந்தேன்;
உண்மையை
கொன்று தான் தின்றாயடா;
வாழ்க்கையே
நீதானென்றேனடா;
வாழ்வோம் என்றே
பிரிந்தாயடா.
;