நினைவின் ஞாபகப் பொழுதில்

நெஞ்சம் பொறுக்கவில்லையடி கண்ணம்மா
நீ நின்ற இடத்தில்
இன்று பார்க்கிறேன்

நெருங்கிவந்த வேளைகளில்
அந்நிலையின் நினைவு
நிலைத்துநின்று ஆடுதடி

நினைத்து பார்க்கக் கூடாதென்பதால்தான்
நிகழ்காலத்தை வேகமாய் சுழற்றிவிட்டேன்

எத்தனை வேகம் சென்றாலும்
கடந்துதானே செல்லவேண்டும்

கடந்துதான் சென்றது….

தனியாய் கடத்திச்சென்றிருக்கலாம்
ஏனோ
தண்ணீரில் கரைத்து சென்றுவிட்டது
கடந்தகால நினைவு கையிலிருப்பு..

எழுதியவர் : மகேந்திரன் (29-Oct-17, 3:34 pm)
பார்வை : 134

மேலே