காதல் வணக்கம்
இளங்கதிரும் பனிக்காற்றும்
வேடிக்கை பார்க்கும் வேளைகளில்
அவள் செல்லச் சிணுங்கல்களில்
ஆசையாய் தோற்கிறேன் !
விரல்களால் என் தலையை கோதி
என் கனவுகளை கலைக்கும்
அந்த அதிகாலை வேளையில்
இன்னுமாய் அவளை நேசிக்கிறேன்…
காதல் அழகானது…
சில சமயங்களில் காதலியை விட…
இனிய காலை(காதல்) வணக்கம் !

