பார்த்தவுடன் காதலா

மழையும் வெயிலும்
இணைந்த நேரம்
வானவில் தோன்றியது...
வானில் வில் தொடுத்தது
யரோ
அவள் விழி தோன்றியது..!

ஒரு நொடி தாக்குதலில்
என் உயிர் பறித்தாள்..
பிரம்மை கொண்டேன்..
ஒரு நொடி தானா
அல்லது
ஒரு யுகமானதோ? - என்று.

பார்த்தவுடன் காதலா
என கேட்கும்
உள்ளமே...
அவளை பார்த்ததால் தான்
காதல் என்பது உனக்கு
புரியவில்லையா?

வானத்து தேவதைகளே
வானவில்லாய் தோன்றிய
என் காதல் தேவதையைக்
கண்டீரோ?- கண்டால்..
காவியமாய் பாடூவீரோ- இல்லை
காப்பியமாய் தொகுப்பீரோ?

என் இதய வீணையை
மீட்டியவளின்
உதயம் நானாகப் போகிறேன்..
ஊண்...உறக்கம் மறந்து
இதோ என்னவளைத் நானும்
தேடிச் செல்கிறேன்!

எழுதியவர் : தேவிராஜ்கமல் (1-Nov-17, 8:08 am)
பார்வை : 152

மேலே