நானிங்கு நீயெங்கு

உனைக்காண நான் வந்தேன்
உனக்காகத் தான் வந்தேன்
உனை மட்டும் காணவில்லை
உன் விழியேனோ பார்க்கவில்லை

மிக சோகம் கொண்டுவிட்டேன்
காதல் தாகம் கண்டுவிட்டேன்
நீ மழையாய் பொழிவாயா
என் வருத்தம் களைவாயா

என் வழியில் நீவேண்டும்
என் மொழியில் நீவேண்டும்
என் வாழ்வாய் நீவேண்டும்
என் மகிழ்ச்சி நீதானே

எனக்குள்ளே வந்து
பாடிவிடு சிந்து
அழைக்கிறேன் மனதால் இன்று
அழவைக்காதே மனதைக் கொன்று

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (1-Nov-17, 8:33 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
பார்வை : 58

மேலே