நீயில்லாமல் நானா

நீயில்லாமல் நானா.. மன்னவனே... தேனில்லாமல் பூவா...
வானில்லாமல் நிலவா.. என்னவனே... காதலின்றி வாழ்வா...

கண்ணனே எனக்குள் எப்படி வந்தாய்
காதலை எனக்கு எப்படி தந்தாய்
முன்னமே உன்னை பார்த்ததே இல்லை
பார்த்ததும் என்னில் பூத்தது முல்லை

(சரணம் 1)

அன்பாலே காதல் மழை பொழிந்தாய்
உன்நெஞ்சம் எந்தன் மனம் வரவழைத்தாய்
பெண்பாலாய் வெட்கம் கொண்டு திரிந்தேன்
ஆண்பால்நீ காதல் எனும் வரமளித்தாய்

தென்றல் பாடுது காதல் சிந்து
அன்றில் ஜோடியாய் நாம் ஆனோம் இன்று
குன்றில் கூவுது குயிலும் ஒன்று
நம்மில் பொங்கும் காதல் வாசம் நன்று (நீயில்லாமல் நானா..)

(சரணம் 2)

கம்பனும் ஷெல்லியும் படித்து வந்தேன்
காதலை அள்ளியே எனக்கு நீதந்தாய்
வம்புகள் தள்ளியே வாழ்ந்து வந்தேன்
வம்பன்நீ மல்லியாய் என்னில் மலர்ந்தாய்

பட்டாம் பூச்சிகள் பட படக்க‌
பம்பராமாய் மனம் சுத்திச் சுத்தி ஆட‌
மிட்டாய் இனிமைகள் இதம் அளிக்க‌
அம்பரம் தொட்டே புதுக் கவி பாட (நீயில்லாமல் நானா..)

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (1-Nov-17, 8:39 am)
சேர்த்தது : அ வேளாங்கண்ணி
Tanglish : neeyillamal NANA
பார்வை : 83

மேலே