ஓலைச்சுவடி
இதிகாசங்களும் புராணங்களும் இக்காலம் பயணிக்க
அக்கால புலவர்கள் அரசர்கள் அறிஞர்கள்
எல்லோரும் பயன்படுத்திய தங்கப் பெட்டகம்..
எழுத்தாணி கொண்டு அழகாக எழுதப்பட்டது
தமிழ் நேசித்த வள்ளல்களால் பாதுகாக்கப்பட்டது
ஆர்வம் கொண்ட ஆசான்களால் தேடப்பட்டது
அற்புதம் வாய்ந்த ஆசிரியர்களால் பிரதிஎடுக்கப்பட்டது
தமிழை வளர்த்த தலைவர்களால் நூலாக்கப்பட்டது
இன்றுவரை நம்மால் படிக்கப்பட வாய்ப்பைத்தந்தது
கணினி காகிதம் எல்லாம் வரும்முன்னே
இவையே இருந்தன பாடல்கள் தாங்கி..
அத்தனை குத்தல்கள் எழுத்தாணி கொடுத்தும்
காயமாய் ஆனாலும் கவசமாய் மொழிகாத்தன....