நதியும் பெண்ணையும்

நதியும் பெண்மையும்
அழகிய ஊற்றென மண்ணிலே
தோன்றி தவழ்ந்தால் பதுமையே !!
ஓடித் தாண்டி , பாய்ந்து , குதித்து
மண்ணை நோக்கி வருகையில்
வளர்ச்சி கொண்ட கன்னியாய்
கண் கவர்ந்தாள் நதி அவளே !!!
அவளின் வளர்ச்சி வேகத்தில்
பலர் தாகம் தீர்ந்தும் போனதே ,
தாங்கி நின்ற மண் அனைத்தும்
வளமும் பெற்று சிறந்ததே !!
தனக்கொரு துணையொன்று
வேண்டும் என்ற தவிப்பில்
பல மையில் கடந்தபின்னே
சமுத்திரன் அவனை கண்டாளே !!
இனிமை தன்னில் சேர்த்திட
தன்னை விட பெரியவன் இவன் தானே தனக்கு சிறந்தவன்
என்ற மன பூரிப்பில் அவனின் கரம் பிடித்தாலே !!
அடுத்த கணம் ,நொடி துவங்கி அவள் வந்த பாதையும் மறைந்ததே !
அவளின் இனிமையோ மாறியதே !!!
அவள் பெருமை கேட்க செவியும் இல்லை ,
குணத்தை காட்ட இடமும் இல்லை !!
கடலில் சென்று கலந்தபின்னே
கவலைப்பட்டு என்ன பயன் ?
மீண்டும் விலகி சென்றாலும்
அவளின் சுவையும் கிடைத்திடுமோ ?
அனுசரித்து வாழ்வதே பெண்ணின்
குணமாய் ஆனதே !!!!

எழுதியவர் : (1-Nov-17, 8:43 am)
பார்வை : 130

மேலே