திரைபோட்டு சிறைவைக்கிறாய்

வெண்ணிலவை மறைத்தாலும்
வெளிச்சம் வெளியே வரும்
உன்முகத்தை மறைத்தாலும்
அழகு காட்சி தரும்

உன்னால் திரை போட‌
உன் முகத்திற்கு மட்டும்தான் முடியும்
என் அகத்திற்கு அல்ல..

என்னிதயத்தில் உந்தன் படம்
ஓவியமாய் வரையப்பட்டு இருக்கிறது
அதில் நீ காவியமாய் இருக்கிறாய்..

என்னிதயத்தை உன்னில் சிறை வைத்துவிட்டாய்
ஆனால் உன்னிதயம் என்னால்
களவாடப்பட்டது உனக்குத் தெரியுமா?

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (1-Nov-17, 8:44 am)
பார்வை : 66

மேலே