காதல் விழியே

முல்லைக்கொடி என்னை
முழுதாய் பற்றியிருக்க
முறைத்துக்கொண்டே பார்க்கிறது – என்
மூன்றாம்பிறை வெண்னிலவு

கண்களிரண்டும்
கருப்புச் சந்திரனாய்
கொஞ்சம்கூட சிவந்திருக்க
கனவிற்கு வாய்பளிக்கவிடவில்லை
காதல் விழிகள்

உன்
நினைவான நட்சத்திரமும் -அதை
நினைவாக்கும் இவன்அட்சரமும்
தூரமிருப்பினும் பார்வையால் தினம்
தொட்டுக்கொண்டுதான் இருக்கின்றது.

எழுதியவர் : மகேந்திரராஜ் பிரபாகரன் (4-Nov-17, 10:01 am)
Tanglish : kaadhal vizhiye
பார்வை : 320

மேலே