விகடன்

அவன் ஒரு விகடன்..
பழுப்பு நிற கோர்ட்டும்.. சிவப்புநிற கழுத்துப்பட்டியும்.. வாய்கிழிய விகாரமாய் சிரிக்கும் மா நிற முகமூடியும் அணிந்திருந்தான்..
ஆ.. கையில் ஒரு செக்ஸபோனும் கூட..
அவன் ஒரு பரட்டைத்தலையன்..

வெளிச்சங்கள் களவுபோன பின்னிரவுகளில்தான் அவன் என்னை சந்திப்பான்..
கொலைவெறியில் செக்ஸபோன் வாசிப்பான்..
மரணம் கம கமக்கும் ஒரு அற்புத மொழியில் அவன் அதை வாசிப்பான்..
என் அருகில் வந்து ஒரு கூரிய கத்தியால் என் கழுத்தை அருத்துக் கொல்வான்..
அவன் ஒரு மாயவித்தைக்காரன்..

எழுதியவர் : றிகாஸ் (5-Nov-17, 11:36 pm)
பார்வை : 80

மேலே