காதல் சரிகமபதநி

சரிதானடி -உன்
கமகம மணப் பார்வை
பகரம் கண்டு
தன்னிலை மறந்த இவனுக்கு
நித்திரை என்பதேது!
சரிதான், ஆனாலும்
நித்திரையுண்டு - நம்
தனிமையில் ஆரோஹணம்நீ பாடி
பட்டுடல்மேனி உன்மேல் அவரோஹணம் நானிசைத்து
மஞ்சத்தின்மேல்
கட்டிக்கண் மூடி
ரிஷபக்காளையிவன்
சரீரம் சாந்தமானால்.