கண்ணீர் துளி

கண்ணீர்த் துளி வடிவில் கடல் நடுவே நிலம் மிதக்கும்!
என்ன இதன் பேரென்றால் இலங்கை எனச் சொல்லுகிறார்!
பாரழுத கண்ணீர் பனிக் கடலாய்க் கிடக்க, இது
யாரழுத கண்ணீர் அலை நடுவே மிதக்கிறது.?
இது -
சீதை அழுததெனச் செப்பியது ராமகதை!
தமிழ் என்னும்
கோதை அழுததெனக் கூறவில்லை பூமியிதை!
கண்ணீர்த் துளி வடிவில் கடல் நடுவே நிலம் மிதக்கும்!
என்ன இதன் பேரென்றால் இலங்கை எனச் சொல்லுகிறார்!