காதல்

உன்னைப் பார்த்த நாள் முதல்
என் நெஞ்சில் நீ புகுந்துவிட்டாய்
என் உள்ளம் உன்னை நினைத்து
நீ சேரும் நாள் தேடி ஏங்கி அலையுது
என் கண்கள் உன் கண்களை நாடி
உறவாட துடிக்க என்னுள் காதல்
கனல் பரவி காதல் ஜுரம்
என்னை வாட்டுதடி! என் காதலுக்கு
பதில் சொல்வாயோ அழகின் அழகே!
ஏற்றுக்கொள்வாயோ என் காதல் மனுவை ;
மனுவிற்கு அங்கீகாரம் தந்து ,
உன் பார்வையை என் பக்கம் திருப்பி,
உனக்காக ஏங்கும் என் கண்களாம்
விளக்கை ஏற்றி வைப்பாய் உந்தன் கண்களின்
காதல் வீச்சால் ,அந்த விளக்கின்,
நம் காதல் விளக்கின், திரியாய்
எண்ணையுமாய் வாழ்வின் நான் இருப்பேன் ,
வாழ்வின் எல்லை வரை
உந்தன் காதலின் நந்தா விளக்காய் !
ஆதவனின் ஒளிபெற்று ஒளிரும் மதிபோல!

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (17-Nov-17, 1:25 pm)
Tanglish : kaadhal
பார்வை : 240

மேலே