விடியலாய் காத்திரு

இயற்கையின் புதல்வி நீ
இத்தனை வருடம் எங்கிருந்தாய்

அருவியின் ஒசை நீ
ஆனந்தமாய் நீ சிரித்தாய்

இலக்கணத்தின் புகழிடம் நீ
இலக்கியத்தின் மறுபிறவி நீ

இதழ் மூடி நீயிருந்தால்
ஒளிவேண்டி தவமிருப்பேன்

மொட்டாக நீயிருந்தால்
உன்வாசம் எப்படி அறிவேன்

விழ நினைக்கும் அருவியை
விரல்நுனியாலே தடுத்து நிறுத்துவாய்

விதிமுறைமீறி நான் தொட்டால்
விழியாலே விரட்டித் தாக்குவாய்

ஏய் தலைவியே!
நான் உன் தலைவன்தானே..
விதிமுறையுடன் வருகிறேன்
விடியலாய் காத்திரு

எழுதியவர் : மகேந்திரராஜ் பிரபாகரன் (17-Nov-17, 12:38 pm)
பார்வை : 258

மேலே