வா புள்ள வெள்ளனத்தில

கண்மூடி தவமிருந்தேன்
காட்டுக்குள்ளே குடியிருந்தேன்..
புள்ளிமான் அது நீயே
காட்டுத்தலைவன் நானே
எங்கே நீ சென்றாலும் கண்டுக்கொள்வேனே

பசுமரத்தாணி போல பதிஞ்சிபுட்ட
உதட்டு ரேகைக்குள்ள ஒளிஞ்சுபுட்ட
உச்சிமலை கொம்புத்தேனைப் போல
உயிருக்கள்ள வந்து இனிச்சிருப்ப

கட்டிக்கொள்ள காத்திருப்பேன்
கட்டளையைக் கேட்டிருப்பேன்
கொஞ்சம் தந்தா போதும் புள்ள
கொட்டித்தீப்போம் மெல்ல மெல்ல

கண்ணுக்குள்ள காணவில்லை
கையிரண்டும் கட்டடிக்கொள்ள
அள்ளிக்கொண்டும் கிள்ளிக்கொண்டும்
வா புள்ள வெள்ளனத்தில..

எழுதியவர் : மகேந்திரராஜ் பிரபாகரன் (17-Nov-17, 1:49 pm)
பார்வை : 226

மேலே