அன்றும் இன்றும்
பெற்றோரால் தவமிருந்து உயிரூட்டப்பட்டு
மருத்துவச்சி பாட்டியின் உதவியால் உலகில் ஊர்ந்து
தாத்தா பாட்டி தாலாட்டி
உறவினர்களின் கைகளில் மடிகளில் உழன்று தவழ்ந்து
மூத்தவர்களின் அன்பான அறிவுறுத்தல்களினால் மனத்திடம் பெற்று
நாக்கே மருத்துவராய் உணவே மருந்தாய்
அறுசுவை உணவு அனைத்தையும் உண்டு
அறுபதிலும் ஆறு போல் துள்ளி மகிழ்ந்து
காலனின் கடும் விரோதியாய் வாழ்ந்து
அன்பானவர்களால் அமைதிக்கு அனுப்பிவைக்கப்பட்டதொரு பொற்காலம்.
Gynecologist ஆல் தொடங்கி வைக்கப்பட்டு
Obstetricians ஆல் வெட்டி எடுக்கப்பட்டு
Paediatrist ஆல் பதப்படுத்தப்பட்டு
Psychotherapist ஆல் சலவை செய்யப்பட்டு
Pathologist ஆல் பயமுறுத்தப்பட்டு
Dietitian ஆல் அறிவுறுத்தப்பட்டு
Endocrinologist ஆல் ஏவப்பட்டு
Oncologist ஆல் அவதிப்படுத்தப்பட்டு
Forensic Pathologist ஆல் அறுத்து
அடக்கி வைக்கப்படும் கலிகாலம் இக்காலம்.

