கிடைத்தது யாரோ

கிடைத்தது யாரோ?

கடை நிலையில் கடைந்தெடுக்கப்பட்ட அன்பாலும், கருணையாலும் உருவான நல்ல மனம் கொண்ட அந்த ஆன்ம சொந்தம் கிடைத்தது யாரோ?

பொன்னாலும், பொருளாலும், மண்ணாலும் மாற்றமடையாத நல்ல மனம் உடைய ஆனந்த ஊற்றுடைய ஆன்ம பந்தம் கிடைத்தது யாரோ?

கிடைத்தது யாரோ?

சக்தியின் ஆக்கமாய் உடைந்ததை மீட்டெடுக்கும் நல்ல மனம் ஆளும் ஆன்மாவால் உலகில் நிலைபெற வாழ கிடைத்தது யாரோ??

கிடைத்தது யாரோ???
உண்மையில் கிடைத்தது யாரோ???

உயிரற்ற நாடென்னும் சொத்தை நேசிக்கும் நாட்டுப்பற்றுள்ளவர்களே, உயிருள்ள மனிதர்களை நேசிக்கத் தவறிவிட்டீர்களென்பதை அறிவீர்களோ???

அறிவில் தீதில்லா, செயலில் தீதில்லா,
நன்மையின் ரூபமாய் நல்ல மனதோடு வாழும் ஆன்ம தூய்மை கிடைத்தது யாரோ???

நாட்டைச் சாராது இயற்கையின் துணையோடு தனிமனிதன் வாழ்வதும் குற்றமா??

பிறரை அடக்கியாள சாபதம் பூண்ட சண்டாளர்களிடம் நல்ல மனதின் தன்னை தானே அடக்கியாளும் குணத்தைப் பற்றிக் கூறுவதும் அறியாமை தான்...
இருப்பினும் தேடுகிறேன், கிடைத்தது யாரோ?

நற்பண்புகளை வரமாய் பெற்று வாழ்வில் பயின்று வாழ்வே ஒன்றிவிட தீதின்றி வாழும் திறமை கிடைத்தது யாரோ??

கிடைத்தது யாரோ???
கிடைத்தது யாரோ???
கிடைத்தது யாரோ???

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (22-Nov-17, 10:57 am)
Tanglish : kidaithathu yaro
பார்வை : 1010

மேலே