கடவுள்

ஞானி ஒருவரை கானகத்தில்
வேடுவன் ஒருவன் கண்டான்
கொடிய வேடுவன்தான் அவன்
ஆயின் அவன் உள்ளத்தில் கடவுளைக்
காண அவா வெள்ளமாய்ப் பெருகியது
ஞாநியைக் கண்டா அவன் அவர்
காலில் விழுந்தான் பின் அன்னாரை
அணுகி கேட்டான்'ஐயனே , ' நான்
கடவுளைக் கண்டு,பேசி அவர் ஆசி
பெற விரும்புகிறேன் ....தயைக் கூர்ந்து
வழி காட்டுவீரா ஐயா ...........என்றான்'
அதற்கு அந்த ஞானி கூறினார்
'மகனே,கடவுளுக்கு உருவில்லை...
காண முடியாது என்பர் .........என்றாலும் , அவர்
கருணைக் கடல் அல்லவா .......நீ வேண்டும்
உருவில் ,அர்ச்சாவதாரம் கொண்டு .....
கோவில்களில் சிலையாய் உனக்காகவே
(பக்தனுக்கு)காத்து கிடக்கிறான்' அதனால்
'உன் மனதில் எந்த வடிவில் அவனை
காண துடிக்கின்றாயோ ..... கிருட்டிணனாய்,
ராமனாய், சிவனாய், முருகனாய் ,விநாயகனாய்
அல்லது தாய் உருவில் அம்பிகையை,
இலக்குமியாய், சரஸ்வதியாய்......இப்படி
உன் மனதில் உள்ள வடிவம் கொண்ட கோவிலுக்கு
சென்றிடுவாய், மகனே, அங்கு அந்த உன்
இஷ்ட தெய்வத்தை , சிலை உருவில் கண்டு
கண்ணால், மனதால் பார்த்து, மனதில் உன்
இருதயத்தில், நிறுத்திவைத்து , நித்தம்
நித்தம் சில நிமிடங்கள் அவன் நாமத்தை
அமைதியாய், ஜெபித்திடு................நீ கேட்கும்
இறைவன், உனக்கு கட்சி தந்து, நீ கூறுவதை
கேட்டு, உன் விண்ணப்பத்திற்கு பதில்
தருவான்....... நம்பிடு, செயல்பாடு வெற்றி
உணடாகட்டும் உனக்கு' என்று ஆசி கூறி
அங்கிருந்து சென்றுவிட்டார்...

வேடனும், ஞானியின் சொல் கேட்டு
ஒரு மரத்தடிக்கு சென்றான் ....
சிறிய கருங்கல்லை தன்முன் வைத்து
அதையே சிலையாய் பாவித்து, தனுக்கு
இட்ட தேவதையான 'ராம் என்ற நாமத்தை
இருக்க கண்மூடி மனதில் ஏற்றி
அமைதியாய் ஜபிக்கலானான்.............
தன்னையே மறந்தான்............நாட்கள்
மாதமாகி, வருடங்கள் என்று செல்ல
அவனை மண்ணே புற்றாகியது .....
புற்றிலிருந்து, இப்போது 'ராம நாமம்' '
இதோ, அவன் இட்ட தெய்வமாய்,
வில்லேந்தி ராமன் அவனுக்கு
காட்சி தந்தான்.............கரையேற்றினான்
அவனை.............வேடுவன், வால்மீகி
மஹரிஷியானான் .............ராம காவியம்
பாடி, எழுதி நமக்களித்தான்'

'நம்புவார் கெடுவதில்லை நான்கு
மறை தீர்ப்பு' நம்பி வழிபட்டால்
இறைவனை கண்டிடலாம் நேரில்
அவனோடு தினம், தினம்
உரையாடிடலாம்............எப்படி
அன்று, 'அத்திகிரி பெருமாளுக்கு'
தினம் தினம் மலர் சார்த்தி,
குடை வீசி மனதார அவனையே
நினைத்து பூஜித்த 'திருக்கச்சி
நம்பிகளுக்கு ,அந்த 'வரதன்'
காட்சி தந்து , தினம்தோறும்
பேசியும் வந்தான்! என்று அவர்
வரலாறு கூறுகிறதே !
இறைவன் இருக்கின்றான் ...
நிச்சயம் அவனை காணலாம்
அவனுடன் உரையாடலாம்...........
தூய மனம் மட்டுமே தேவை
'தூயோமாய் வந்து , தூமலர்
தூவித் தொழுது ...வாயினால்
பாடி, மனிதனால் சிந்திக்க '
ஆண்டாள் நாச்சியார் கூறியபடி,
கண்ணனை... கார்மேக
வண்ணனை காணலாம் வாரீர் !

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (22-Nov-17, 1:28 pm)
Tanglish : kadavul
பார்வை : 102

மேலே