முயற்சி

வானத்தின் தூரம் போலவே
உனது வெற்றிப்படிகள் நீண்டிருக்கலாம்
உணர்வுகள் ஊமையானாலும்
உலகின் எல்லை வரை பரப்பேனென உறுதிகொள்.

தேடு, உன் தேடலின் விளிம்பிலாவது
விண்ணைத்தொடுவாய்...!
வினாக்களுக்குள் விடைகளை வைத்துக்கொண்டு
விடையின்றி வீழ்ந்து போகாதே.

சாதனைகள் உனக்காய் காத்திருக்கின்றது
உன் சாவிற்குமுன் எட்டிப்பிடி
சாத்தியம் எனநினைத்து.

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (23-Nov-17, 5:19 pm)
சேர்த்தது : ifanu
Tanglish : muyarchi
பார்வை : 272

மேலே