தடை செய்யபட்ட இதயம்-1

உன் இழிப்புகளை
காணவரும் போதெல்லாம்
முக சுழிப்புகளையே
காட்டி செல்வாய்,
சளிப்புகள் கண்டதில்லை
ரசிப்புகள் நின்றதில்லை
நினைப்புகளில் நீ தோன்றும் போதெல்லாம்
களிப்புகளுக்கு என்னுள் பஞ்சமில்லை,
தர்மம் மறந்த தாரகையே
தவிப்புகள் அறிவாயா..
கிழிப்புகளாய் கோடுகள்
போட்டாலும்
அழிப்புகள் செய்து
அடுத்த நொடி நாடி வருகிற்து,
உன்னால் தடை செய்யபட்ட என்
இதயம்..!


("தடை செய்யபட்ட இதயம்" எனும் எனது கவிதை தொகுப்பு புத்தகத்திலிருந்து).


எழுதியவர் : சுரேஷ் காந்தி (25-Nov-17, 11:15 pm)
சேர்த்தது : சுரேஷ் காந்தி
பார்வை : 233

மேலே