நீலநயணங்களில் ஒரு நீண்ட கனவு வந்தது.....( tamil novel ) chapter 40

chapter : 40
Find all chapters in www.tamilnovelofsrikavi.blogspot.in

மதன் , சிமியை விட்டு விலகி நின்றான். அவள் கையை பிடித்து குடிசை வெளியே இழுத்து வந்தான். "மதூ! நாம் இந்த இடத்திலே இனி இருக்க வேண்டாம்!" என்று கூறிய சிமியின் வார்த்தைகளை காதில் வாங்காமல் அவளை இளுத்து கடற்கரைக்கு வந்தான். ஹலிகாப்டர் அவர்கள் இருக்கும் கரையோரம் நெருக்கிவர , சிமியின் கையை இழுத்து கரையில் அவளை தள்ளினான். " போய் விடு சிமி!!" மதன் உரக்க சொன்னான். அவன் ஒரு முடிவுடன் அவ்வாறு சொன்னதை கேட்ட சிமி, அமைதியானாள். மதன் கோபத்தோடு " முட்டாள்தனமா இனியும் இருக்காதே சிமி, வாழ்கையை புரிந்து நடந்துகொள், போ!!" என்றான்.


ஹலிகாப்டர், கரையருகில் வந்து கரையிரங்க , அதன் புயல் வீசும் காற்றில் அலைகளும், கரைமண்ணும் விலகின. பின் அதில் இருந்து இரு ராணுவ வீரர்கள் இறங்கினாா்கள். ஒருவன் உடனை சென்று மதனுடய  இருகைகளை பின்னால் வைத்து விலங்கிட்டான். இதை எதிர்பார்க்காத மதன் " விடுங்க , என்னை ஏன் கைதுசெய்கிரீர்கள் ??!!" என்று கத்தினான். அந்த ராணுவ வீரன் பதில் பேசாது மதனை கீழே தள்ளி, அவன் வயிற்றிலே ஓங்கி மிதித்தான். வலி தாங்காமல் " அம்மா!! " என்று துடித்தான் மதன்.

 அங்கே நடந்ததை நம்பமுடியாமல் பார்த்து அதிர்ச்சி அடைந்த சிமி ஓடிச்சென்று மதனை தாங்கி,  " ஏன் இப்படி செய்கிரீர்கள் ????!!! இவர் நிரபராதி !!. அவரை விட்டுவிடுங்கள்" என்று அழுதாள். மற்றொறுவன் வந்து, அவள் கைகளை பற்றி ஹலிகாப்டருக்குள் இளுத்துச்சென்றான். " மேடம், இங்கே அதிக நேரம் நாம் இருக்க கூடாது. உடனே செல்ல வேண்டும், வந்துவிடுங்கள்" என்று உணர்ச்சியே இல்லாமல் இயந்திரம் போல் பேசினான். மதனை மற்றொருவன் இழுத்துச் செல்ல அந்த ஹலிகாப்டர் பின்நுழைவில் இருவரையும் தள்ளிவிட்டார்கள். ஒருவன் சென்று ஹலிகாப்டரை இயக்க , அதல் இறக்கைகள் படபடபட வென இயங்க தொடங்கியது. மற்றொருவன் மதனுடைய கைகளை அங்கே இருந்த கம்பியில் சேர்த்து விலங்கிட்டான். பின் சிமியிடம் வந்து, " பயபட வேண்டாம்,  உங்க பாதுகாப்பிற்காக பாராசூட் கட்டிவிடுகிறேன். பத்திரமாக அமர்ந்து கொள்ளுங்கள். விரைவில் சென்றுவிடுவோம்" என்று மற்றொருவன் சிமியிடம் வந்து அவளுக்கு மட்டும் பை போல் ஒன்றை முதுகில் கட்டினான். அவன் சட்டைபை முன் , விலங்குக்கான சாவியை அவன் வைத்திருப்பதை பார்த்த சிமி, அவன் அறியாமல் அதை எடுத்துக்கொண்டாள். பின் மெல்ல அந்த ஹலிகாப்டர் மேல் எழ அவனும் சென்று முன்யிருக்கையில் அமர்ந்துக்கொண்டான். 


தீடீர் வேகம் கூட அந்த ராணுவ ஹலிகாப்டர் சல்லென்று மேல் எழும்பி கடல் உயரே பறக்க தொடங்கியது. அந்த தீவு, அதனுடைய அளவு வெகுவாக குறைய குறைய, அந்த அழகிய  தீவு அவர்களை விட்டு பிரிந்து , கண்ணை விட்டு மறைந்தது. சிமி ,  மதன் வலியில் இருப்பதை பார்த்தாள். உடனே அவளிடம் இருந்த சாவியை கொண்டு அவன் விலங்கை திறந்து அவன் கைகளை விடுவித்தாள். மதன், இவள் என்ன செய்கிறாள் என்று புரியாமல் பார்த்தான். சிமி தான் அணிந்து இருந்த பாராசூட்டை கலட்டி மதனுக்கு அணிவித்தாள். " குட் பை , மதன்" என்று கூறிவிட்டு  வியப்போடு பார்த்தவனை, இதழோடு இதழ்சேர்த்து ஒரு முத்தம் வைத்தாள். அதை எதிர்பார்க்காத அவன் கண்கள் மூட , சட்டென்று அவனை பிடித்து, உயரே பறக்கும் ஹலிகாப்டரில் இருந்து அவனை கீழே கடலில் தள்ளிவிட்டாள்.



கடல் காற்றும், அந்த ஹலிகாப்டரால் வீசிய காற்றின் இறைச்சலும் மதன் காதில் விழாதவாறு ஒரு வலி அவன் வயிற்றில் விழுந்த அடி அவனை துடிக்க வைத்தது. இவர்கள் மனிதர்கள் தானா ?! என்று அவனுக்கு தோண்றியது. பின் அவன் சற்று நிதானித்து கண்கள் திறந்து பார்க்கையில், சிமி அவனுக்கு, பாராசூட்டை அணிவித்துக்கொண்டு இருந்தாள். சுதாரித்தவன், அவள் கண்களில் கண்ணீருடன் அவனை பார்த்தது, அவன் கண் முன் நிலைத்தது. " ஐயோ, இந்த பார்வை... இதை கண்டால் என் இதயம் துடிக்க மறந்து விடுமே!! ". அந்த நொடியில் இருந்து, அவனுக்கு நேரத்தின் வேகம் குறைந்தது. காற்றில் அலைபாய்ந்த அவள் கூந்தல் , இப்போது தெளிந்த நீரலை போல் மெல்ல அசைந்தது. அவள் எதுவோ அவனிடன் சொல்ல மெல்ல அவள் இதழ் அசைந்தது. ஆனால் அது என்ன என்று அவனுக்கு கேட்க்கவில்லை. அவள் கருநீல விழிகள் கண்டு துடிக்க மறத்த அவன் இதயம், அவள் இதழ்கள் கண்டதும், துள்ளி திடுக் கென்று துடிக்க அவன் உயிர்பெற்று மீண்டன். அவள் இதழ் சேர்த்து அவனை முத்தமிட , அடுத்த நொடி அவன் காற்றில் மிதப்பது போல் உணர்ந்தான்.

to be continued...
Visit tamilnovelofsrikavi.blogspot.in for next chapters...

எழுதியவர் : sri (26-Nov-17, 1:22 pm)
சேர்த்தது : srikavi 110
பார்வை : 125

மேலே