srikavi 110 - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : srikavi 110 |
இடம் | : |
பிறந்த தேதி | : |
பாலினம் | : |
சேர்ந்த நாள் | : 02-Mar-2017 |
பார்த்தவர்கள் | : 109 |
புள்ளி | : 22 |
இனியும் தூக்கம் இல்லை
உன் கனவுகள் எழுப்பும் போது
கொஞ்சம் உன் பார்வை வேண்டும்
நான் போகும் வழி தெரியாத போது
மெல்ல மெல்ல இனி விழிதிற
மெல்ல மெல்ல இனி விழிதிற
கனவுகள் கேட்கிறதே!!
கேட்கும் கதைகள் எல்லாம்
உன்னிடம் சொல்ல காத்திருக்கும்
கதையில் நீயும் நானும் இல்லை
உயிர் இன்றி கதைகள் மடியும்
யாரும் அறியாமல் இனி போகட்டும்
யாரும் அறியாமல் இனி போகட்டும்
கதைகள் மடியட்டுமே !!
இன்று வந்த மழையில்
மட்டும் புதுமை எதுவோ?
என்னை நனைக்கும் துளிகள்
என் இதயம் நனைக்க வில்லையே
கொஞ்சம் அங்கும் போ மழையே
கொஞ்சம் அங்கும் போ மழையே
என் இதயமும் நனையட்டுமே!!
sri
ஆதி மனித மொழிஇன அடையாளம்
ஆயிரம் இருந்தும் கடைசி மீதம்
அதிலும் அன்டையர் திமிர் ஆதிக்கம்
தமிழ் ஆண்மை அழித்திடவா துரோகம்?
தன் வீட்டில் தான் வளர்த்த பிள்ள
யாரடா நீ? தொட கூடாதென சொல்ல
திட்டமா? காளையை கொலைகளம் தள்ள
விடுவோமா? நீதியின் பெயரால் தடைகொள்ள
பார்த்தவன்தான் பல அரசியல் சாயம்
பொறுத்தவன்தான் தன் இனபடுகொலையும்
இளைத்தவன்தான் என நினைத்தவராலும்
இனைந்ததினால் கடற்கரை எரிமலை காணும்
இனி ஜல்லிகட்டு தமிழ் மன்னில் நடக்கும்
தலைமுறை தாண்டி நூற்றாண்டுகள் கடக்கும்
தமிழினம் வீரம் கண்டு உலகம் வியக்கும்
மக்களின் புது அமைதி புரட்சியின் தொடக்கம்
Sri