அடங்கா காளையடா தமிழன்
ஆதி மனித மொழிஇன அடையாளம்
ஆயிரம் இருந்தும் கடைசி மீதம்
அதிலும் அன்டையர் திமிர் ஆதிக்கம்
தமிழ் ஆண்மை அழித்திடவா துரோகம்?
தன் வீட்டில் தான் வளர்த்த பிள்ள
யாரடா நீ? தொட கூடாதென சொல்ல
திட்டமா? காளையை கொலைகளம் தள்ள
விடுவோமா? நீதியின் பெயரால் தடைகொள்ள
பார்த்தவன்தான் பல அரசியல் சாயம்
பொறுத்தவன்தான் தன் இனபடுகொலையும்
இளைத்தவன்தான் என நினைத்தவராலும்
இனைந்ததினால் கடற்கரை எரிமலை காணும்
இனி ஜல்லிகட்டு தமிழ் மன்னில் நடக்கும்
தலைமுறை தாண்டி நூற்றாண்டுகள் கடக்கும்
தமிழினம் வீரம் கண்டு உலகம் வியக்கும்
மக்களின் புது அமைதி புரட்சியின் தொடக்கம்
Sri