காதல் கணிதம் கடினமில்லை

என்னில் என்னை
கழித்துக்கொண்டு
என்னில் உன்னை
கூட்டிக்கொண்டேன்

கூட்டி கழித்து
பார்த்தால்
நான் நீயாய்
இருக்கிறேன்!

துன்பங்களை
வகுத்துக்கொள்வோம்
இன்பங்களை
பெருகிக்கொள்வோம்

எனக்கேற்ற
மி சி ம
நீ
(மிக சிறந்த மனைவி)

என் வாழ்வில்
சராசரி நீ...
உன் புன்னகை
என் மகிழ்ச்சியின்
சதவிகிதம் %

காம்பஸ் போல
உன்னை வட்டமிடுவேன்
என் வாழ்வெனும்
பரப்பில் மையப்புள்ளி நீ ...

உன் இடையின்
சுற்றளவு கண்டு
சுருண்டு விழுந்தேன்

உன் பெயரே
எனது வாய்ப்பாடானது

உன் புன்னகையின்
சூத்திரம் புரியாமல்
சுற்றித்திரிகிறேன்
கூடிய விரைவில்
தீர்வு காண்பேன் .

நான் + நீ = நாம்

எழுதியவர் : அ.வீரபாண்டியன் (2-Mar-17, 12:12 pm)
பார்வை : 214

மேலே