கல்லூரி காலம்

எவரையும் அறியாமல் எதுவும் தெரியாமல் இங்கு (கல்லூரி ) வந்து சேர்ந்தோம் ,

காலத்தாலும் மறக்க வைக்க முடியாத நல்ல நினைவை நெஞ்சில் சேர்த்தோம் ...

முதல் நாள் பெயர் கூட அறியா மனிதம் பின்னாளில் பிரிக்க முடியா தோழமையாய் மாறி போன நினைவை என்ன சொல்ல !!!

நல்லறிவு கிடைத்ததா தெரியவில்லை எனக்கு ,நல்ல பொழுதும் nalla தோழமையும் கிடைத்தது !!

பெற்றோரும் அறியா பலவற்றையும்
தன்னை பற்றி தான் அறியா யாவையும் சொல்வான் என் தோழன்

சோகம் நெஞ்சுக்குள் இருந்தாலும் ஒரு நொடியில் மாற்றிடும் மந்திரம் கற்றது என் கல்லூரி ...


பிரிந்தாலும் நினைவில் நிற்கும் நல்ல சொந்தம் தந்த இந்த கல்லூரி சொர்கமே !!!

கல் மனம் கொண்டவரும் இறங்குவான் ,கண் கலங்குவான் தன் கல்லூரி வாழ்வினை நினைத்திடும் பொழுது ,

இத்தகைய கல்லூரி வாழ்வினை ரசிக்க தெரியாதவன் கண்ணிருந்தும் குருடன் !

மனம் மாறும் குணம் மாறும் கொண்ட கோலம் மாறும் என்றும் மாறாது கல்லூரி காலமும் அது தந்த நினைவுகளும் !!!!

எழுதியவர் : கீர்த்தி (26-Nov-17, 6:11 pm)
சேர்த்தது : keerthi
Tanglish : kalluuri kaalam
பார்வை : 482

மேலே