காதல் சம்மதம்
கதைகள் பேசிய விழிகள்
இன்று
காதல் பேச அழைக்கிறது.
யார் தொடங்குவது
என்ற கேள்வியுடன்
மௌனம் ஆட்கொண்டது
நான் தொடங்க
எத்தனிக்கும் வேளையில்
வார்த்தைகள் வெளியே வர
முரண்டு பிடித்து
தொண்டைக்குள் நிற்கிறது.
தயக்கத்தை தள்ளி வைத்து காதல்
மயக்கத்தில் வீழ்ந்திட
சொல்லிட விழைந்தேன்
அவளின் காதல் பார்வையில்
குழைந்தேன்
விரல்களோடு விரல்களை
கோர்த்ததும்
காதல் சம்மதம் தந்தாள்
தலையை என்
தோளின் மீது சாய்த்து.