காதல்

என்னவனே, என்னை நீ
"அழகிய தங்கப்பதுமை
உயிர்கொண்டது போல்
என்றாய், செந்தாமரை
மாமலர் என்றாய் "நான்
உனக்கு ஒன்று கூறட்டுமா
மன்னவனே, என்னவனே ,
"நான் தூய்மைசேர் மாமலர்
செந்தாமரை என்றாலும்
நீ அதனுளுரையும் வாசம்
என்பேன்; வாசமில்லா
மலரை வண்டுகள் நாடாது,
இறைவனுக்கு வாசமலர்
கொண்டுதான் பூஜை
செய்வர், அர்ச்சிப்பர்;
என்னை மலர் என்றாயே
என்னவனே, நீ என்னுள்
உறையும் வாசம் எந்தன்
உயிர் நீயே காதலனே
எந்தன் கண்ணும் நீதான்
அதில் பார்வையாய் உறைகின்றாய்
கண் அவன் கணவனாய்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (30-Nov-17, 11:44 am)
Tanglish : kaadhal
பார்வை : 187

மேலே