காதல்
நான் அவளை பார்த்தேன்
அவளும் என்னை பார்த்தாள்
பார்த்து நகை ஒன்றும் உதிர்த்தாள்
அது என்ன புன்னகையா , இல்லை
நீ எனக்கு நிகரா இல்லையே என்ற
மமதையில் உதித்த அகங்கார நகையா
இல்லை இப்படியும் ஒரு காதல் நகையா
ஒன்றும் அறியாது நிற்கின்றேன்
இப்படி ஏன் நான் நினைக்கின்றேன்
என்னுள் ஏதோ தாழ்வு மனப்பான்மையோ
தெரியலையே ............திகைத்து நிற்கின்றேன்