எழுது முனை பேனா

விழிகள் தேடிய விரிசல்களில்
உயிர் தந்த பேனாமுனை
எழுது முனை பேனா
உனையன்றி
எழுத முனைப்பேனா..
கிறுக்கிய கிறுக்கல்களில்
குமுரிய அவலநிலை
படித்தவர் பயிலர் சிலர்-கண்டு
அஞ்சி நடுங்கிய நிலை
குத்தும் வாள்முனை யாவும்
ஆறூம் சுவடுகளன்றோ..
தீட்டிய வரிகளிரண்டு
காலம் கடந்ததின்று..
புதைத்த நிகழ்வுகளனைத்தும்
மறுவடிவம் வடித்தனவே..
மீண்டும்
எழுது முனை பேனா
உனையன்றி
எழுத முனைப்பேனா..