ஒரு வார்த்தை பேச

எத்தனை முறை உன்ன பாத்திருக்கேன்,
அத்தனை முறையும் நான் தோத்திருக்கேன்.
ஒவ்வொரு தடவையும், உனைப் பார்த்து,
ஒதுங்கி நானும் போயிருக்கேன்.

நாலஞ்சு வருசமா உன்ன ,சுத்துறேன்டி,
நாயா பேயா அலையுறேன்டி.
என்னமோ தெரியல சாகுறேன்டி,
எதுவுமே சொல்லாம நோகுறேன்டி.

இன்னக்கி சொல்லனும்னு ,நான் நினைப்பேன்,
உன் இஷ்டத்துக்கு ,முறைச்சு நீ பாப்ப.
கழுத்துல வார்த்தை, வந்து நிக்குமே,
உன் கண்ணைப் பாத்து ,உள்ளுக்குள்ளே ஒடிப் போகுமே.

ஊருக்குள்ள பெரிய கோபக்காரன் நான்,
உன்ன மட்டும் பாத்த, பயந்து போறேன்.
ஒரு வார்த்தை, இதுவரைக்கும் பேசலையே,
உன் நெனப்பு, என்ன விட்டு போகலையே.

இப்பக்கூட வந்து நான், சொல்லிப்புடுவேன்,
நீ இல்லயின்னு சொல்லிட்டா இறந்திடுவேன்.
உன்ன பாத்துகிட்டே,இப்படியே இருந்திடுவேன்
நீயா வந்து பேசும்வரை காத்திருப்பேன்....

எழுதியவர் : தங்க பாண்டியன் (10-Dec-17, 10:05 pm)
Tanglish : oru vaarthai PESA
பார்வை : 364

மேலே