உன் மெளனமும்
பூவிழ் இதழ்
மலர்ந்தால்..
அதிலேதான்
அவளும்
தெரிந்தாள்..!
கண்கள் இரண்டில்
காதல் திணிப்பவள்..
காட்டுக் கனியாக
என்றும் இனிப்பவள்..!
யாரவள்..?
௭ன் நெஞ்சோரம்
நெடுநாளாய் கிடந்தவள்..
என் கைசேர கண்கள்
சிமிட்டியே பிறந்தவள்..!!
எந்தன் இரவுகளே
உந்தன் வண்ணம்
மிஞ்சிட யாருமில்லையோ..?
காற்றே நீயும் வந்து
என்னவள் கூந்தல் புகுந்து
கலைத்துவிட்டுப் போ
என்னிரவுகள் தலைகுனிந்திட..!!
என் கண்ணீரெல்லாம்
காய்ந்து கொண்டே
இருந்தது காரணம்
என்னவளின் பிம்பம்
கண்களில் கடந்தது..!!
என் தலைகோதும்
உன் விரலிடுக்குகளில்
முத்தங்கள் நிரப்பியே
முழு இரவினைக் கடக்க
முழு பகலும் காத்திருக்கின்றேன்..!!
என் மரணமும்
என்றோவென்று
மறந்தது..
உன் மெளனமும்
என் காகிதம் மேல்
கவிதைகளாக
நிறைந்தது..!!
செ. மணி