திருநங்கையர்

"வயதுக்கு
வராத வனிதையர்கள்"

"பூப்பு எய்யா பூக்கள்"

"வாசமும் இல்லை
வந்தூரும் தேனும் இல்லை
சொக்க வைக்கும் செண்டுகள்
சுற்றி வரும் வண்டுகள்"

"காகிதப் பூவென்றும்
நெகிழி பூவென்றும்
தூரத்தில் பார்பவர்கள்
சொல்ல சொல்ல மாட்டார்கள்"

"அழகாலும் கவர்ச்சியாலும்
அசர வைக்கும் அணங்குகள்"
ஆண்கள் முறைத்தும் பார்பார்கள்
முறைவைத்தும் பார்பார்கள்"

துணை தேவையென்று
கேட்காமலேயே
தொல்லை தந்தவர்பின்
துணைக்கு போனவர்கள்

"கல்யாண சந்தைக்கு வராத
மாட்டுப் பெண்கள்
கல்யாணத்தை பார்க்காத
நித்திய கல்யாணிகள்"

"குடும்பம் நடத்தாத குணவதிகள்"

"சுமக்காத வயிறு"
"தாலாட்டுப் பாடாத வாய்"
"தூளி ஆட்டாத கைகள்"
"பாலூட்டாத தாய் மடி"

இருந்தாலும்
ஆசையையும் அன்பையும்
சுமந்து திரியும்
அம்மாவின் அரிதார வடிவங்கள்

"கட்டிலுக்கு வந்தவரெல்லாம்
கணவரல்ல
தொட்டவரெல்லாம்
தோள் கொடுத்தவருமல்ல"

"ஒவ்வொரு இரவும்
முதலிரவே
அலங்காரமாகவும் இருக்கனும்
அழாமலும் இருக்கனும்"

"நின்று விட்டு போனவரெல்லாம்
நிழல் தேடிவந்தவரே"

"கட்டுக்கழுத்தியாகவே
கடைசி வரைக்கும் வாழும்
கைம்பெண்கள்"

"ஆண்டவன் அவசரமாய்
வடிவம் கோடுத்த அப்சரசுக்கள்"
"முழுமை பெறாத
பிகாசோ ஓவியங்கள்"
கிறுக்கி வைத்த
தெரு படங்கள்"

"கர்ப்பகிரகம் சுமக்காத
கடவுள்கள்"
தலைமேல் கைவைத்தும்
ஆசீர்வதிக்கும்
தேடிவந்து. வாழ்த்தும்

ஒண்டிப் பனைமரமாய்
இடி விழும் காலம்வரை
இந்த மண்ணிவாழ்க்கை

எழுதியவர் : (13-Dec-17, 9:32 pm)
பார்வை : 70

மேலே