சூட்டுக்குப் பொக்கெட் இல்லை

ராஜா பேருக்கு எற்ற பணக்காரன். பிறக்கும் போது பணக்கார குடும்பத்தில் ஒரே மகனாக பிறந்தான் அவனின் தகப்பன் ஜெயம் ஒரு அரசியல் வாதி. ஊழல் மூலம் சொத்துகளுக்கு அதிபதியானவன் . ஒரே வாரிசாக “போர்ன் வித் சில்வர் ஸ்பூன்” (Born with a Silver Spoon) என்பதர்க்கேற்ப செல்வ செழிப்பில் வளர்ந்தவன் ராஜா. அவனின் பாட்டன் பெயர் செல்வம் ஊரை ஏமாற்றி பணம் செர்த்தவன். அவனின் தந்தையும் பாட்டனும் கார் விபத்தில் திடீர் என இறந்தி எரிந்து போனார்கள். அவர்களின் உடலை அடையாளம் காணமுடியவில்லை.
தந்தை சென்ற வழியில் பணம் சேர்த்து ,கோடீஸ்வரன் என்று பெயர் வாங்கினான் ராஜா. அவனுக்கு இரண்டு சின்ன வீடுகள் . ஆறு பிள்ளைகள ராஜாவுக்கு உடல் எல்லாம் வியாதி. ஒருவருக்கும் ஒரு சதம் கொடுக்கமாட்டான். அவனுக்கு ஒரு ஆசை. தான் இறந்தால் தன் உடலை புதைக்க சந்தன மரத்தால் செய்த சவப் பெட்டி தேவை என்று. தனது . மரண வீட்டுக்கு வந்திருப்பவர்களுக்கு அந்த பெட்டியில் இருந்து சந்தன வாசனை வீச வேண்டும், பெட்டியின் விளிம்புகள் எல்லாம் தங்கத்தால் இருக்க வேண்டும் , தன உடலை விலை உயரந்த துணியில் கோர்ட் சூட்டால் அலங்கரிக்க வேண்டும்.
தையல்காரனிடம் போய் தன் மனதுக்கு பிடித்;த உடுப்பை பார்த்தரர் ராஜா . ஸ்டைல் பிடிதுக்கொண்டது: அனால் கோர்ட்டுக்கும் சூட்டுக்கும் போக்கட் இல்லை
ராஜாவுக்கு கோபம் வந்து விட்டது
“எங்கே பொக்கட்டை காணோம் டெய்லர்”?
“அது தேவையில்லை சேர் “
:”ஏன்”?
“ நீங்கள் போகும்போது காசு ஒன்றும் கொண்டுபோகப்போவதில்லை. அதாலை பொக்கட் வைக்க இல்லை சேர் “ டெய்லர் சொன்னான்

*****
ர்

எழுதியவர் : பொன் குலேந்திரன் கனபா (14-Dec-17, 5:26 pm)
பார்வை : 127

மேலே