நினைவுகளின் கடைசி நிமிடம்

நினைவுகளின் கடைசி நிமிடம்
```````````````````````````````````````````````````
எதிர்பாராத எத்தனையோ விடயங்கள்
பொக்கிஷமாய் பூத்தது ,
எதிர்பார்த்த அத்தனையும் ஏக்கங்களில்
விஷத்துளியாய் வீழ்ந்தது....

தொலைத்தேன் என்னை உன்னில்
இப்போது,
தேடுகிறேன் என்னில் உன்னை
உன் நினைவுகளை சுமந்தபடி....

நாட்கள் நகர நகர
உன் அருகாமையை நான்
அதிகம் நேசிக்கிறேன் .....

உதிரும் இலைகளைப்போல்
என் உயிரினை பக்கம் பக்கமாக
எடுத்துச்செல்கின்றாய்....

காதலிக்கவில்லை நீ
என்னையும் என் காதலையும்
என்பதை நீ நழுவும்
தருணங்களில் உணர்கிறேன்....

என்னில் காணாத ஒன்றை
உன் விழிகள் தேடக்கூடும்
தேடலின் விடையாய்
என்னை மட்டுமே கண்டுகொள்வாய்.....

என் காத்திருப்பின் நொடிகளில்
உன் வார்த்தை அம்புகள்தான்
விழுந்து எழுகிறது.....

அழகுவடியும் உன்னிலிருந்து
அள்ளியெடுத்த நினைவுகள்
அத்தனையும் என்
கடைசி மூச்சுவரை உயிர் வாழும்.....

காகிதத்தில் எழுதிவை
என்னையும் என் காதலையும்
காலம் உன்னைத்தோற்கடிக்கும் நாளில்
என்னை வாசித்துக்கொள்வாய்....

என்னைப்போல் ஒருவன்
உன்னைக்காதலித்தாலும்
நீ தந்த காயங்களோடும்
கடைசி நொடிவரை உண்மையோடும்
உன்னை சுமக்கும் ஜீவன்
நானாகத்தானிருக்கும்.

எழுதியவர் : இர்பான் அஹ்மத் (18-Dec-17, 8:45 pm)
சேர்த்தது : ifanu
பார்வை : 295

மேலே