அன்னை

ஐயிரு திங்கள் கருவினில் சுமந்து
மலரினும் மென்மையாய் மடியில் சுமந்து !
கல்பட்டு வீழ்ந்தவனை பொற்கரத்தால் அணைத்து! வலியையும் மனதில் சுமந்து!
கல்வியில் சிறக்க புத்தகம் சில சுமந்து!
வாழ்வில் சிறக்க பல அனுபவங்களை சுமந்து!
எவரும் கொள்ளாத உயர்மிகு அன்பால் உலகின் தன்மை
விளக்கி ஊட்டியவள் அன்னையே!

எழுதியவர் : மு. கமலேசன் (18-Dec-17, 11:38 pm)
சேர்த்தது : kamalesan59b55df4ecf83
Tanglish : annai
பார்வை : 179

மேலே