அன்னைக்கு ஓர் கவிதை

அன்னையே
அன்பின் உண்மையே
என் ஆதி அந்தம் நீயே..!
உன்னையே
உள்ளத்தில் நம்பியே
உயிர் வாழுரேன் உலகத்திலே..!
காடுமேடு தினம் நடந்து
கால்கடுக்க நீ உழைத்தாலும்
கஷ்டம் எனக்கு தெரியாமலே
கண்ணும் கருத்தாய் வளர்தாயம்மா..!
உருப்படாதவன் என சொல்லி
உறவுகள் பலர் இகழ்ந்தாலும்
என்மகன் தங்கம் என்று
எப்போதும் என்னை புகழ்வாயம்மா..!
உணவு உண்ணாமல் நானிருந்தால்
உறக்கம் தொலைத்து காத்திருப்பாய்..!
உன் பசியே மறந்துவிட்டு
உதிரம் கண்ணில் பூத்திருப்பாய்..!
எத்தனை பொய் நான் சொன்னாலும்
எல்லாவற்றையும் நம்பிடுவாய்..!
என் வயிறு நிறைந்தது என்றால்
எப்பொழுதும் நம்பமாட்டாய்..!
நீ சொல்லும் சொல்லை கேட்டதில்லை
நீ சொன்னது எதையும் செய்ததுமில்லை
இருந்து எனை நீ வெறுக்காமல்
இந்திரன் போல வளர்த்தாயம்மா..!
உன் அன்புக்கு வானமே எல்லை
உன் அக்கறைக்கு வரைமுறையே இல்லை
உனது தியாகத்தை ஈடு செய்ய
உலகில் எதுவுமே கிடையாதம்மா..!
உன் பேச்சில் கோபமிருந்தாலும்
உன் பேரன்பில் குறையில்லை..!
உன் மூச்சிலும் பாசமுண்டு
உன்மகன் இதை அறிவேனம்மா..!
உன் கனவுக்கு உயிர் கொடுக்க
கடவுள் நமக்கு கண் திறப்பார்..!
உன் நிழலில் எனை வைத்து
நிம்மதி எனக்குள் குடி வைப்பார்..!
அடுத்த ஜென்மம் எனக்கிருந்தால்
அதிலும் அம்மா நீதானம்மா..!
கொடுத்த அன்பே திருப்பி தர
கோடி ஜென்மம் பிறப்பேனம்மா..!
கொடுத்த அன்பே திருப்பி தர
கோடி ஜென்மம் பிறப்பேனம்மா..!!!