முதிரா கன்னி 9

உள்ளே மொத்தம் நாலு பேர்... பார்ப்பதற்கு அவ்வளவு ஒன்றும் நல்லவர்களாக தெரியவில்லை. அந்த பெண் தனியே நடுங்கி கொண்டிருந்தாள். தாலி ஒன்று கட்டிலின் மேலே கிடந்தது.
" யார்ரா நீங்க... என்ன பண்றீங்க...?"
"ஸார்... என்ன காப்பாத்துங்க ஸார்... இவன் என்னை ஏமாத்தி கூட்டியாந்துட்டான் ஸார்... என்னோட வாழ்க்கையே போச்சு ஸார்..." அவள் கண்களில் கண்ணீர் கொட்டியது.
"யோவ்... இவங்கள கூட்டிபோய் வண்டியில ஏத்துய்யா..."
போலிஸ் ஸ்டேஷன்...
" கான்ஸ்டபிள்... இவங்க அப்பாவுக்கு போன் பண்ணி வரச்சொல்லு. அப்படியே அவங்க ஊர் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைண்ட் பண்ணியிருந்தா அவங்களுக்கும் விஷயத்த பார்வர்டு பண்ணிடு. அப்புறம்... அந்த பையங்களுக்கு போன் பண்ணி வந்து இந்த பொண்ண கூட்டிட்டு போக சொல்லு. நாளைக்கு அவங்க அப்பா வந்தவுடனே அவரோட அனுப்பிடலாம்."
"இந்தாம்மா... இங்க வா... ஏம்மா இப்படி தப்பு பண்றீங்க... உங்க அப்பா, அம்மா உங்க மேல வைக்கிற நம்பிக்கைய, பாசத்தை சீர்குலைச்சு தூக்கி எறிஞ்சிறீங்க..."
" என்னை மன்னிசிடுங்க ஸார்... அவன் என்னை உயிருக்கு உயிரா காதலிக்கிறதா சொன்னான் ஸார்..."
"சொல்லுவான்... எல்லாம் சொல்லுவான்... அன்பே... ஆருயிரே... கண்ணே...மணியேண்ணு கண்ட கருமாந்தரமெல்லாம் சொல்லுவான்.நாமதான் ?கவனமா இருக்கணும். குரல்ல ஐஸ்கிரிம வழிய விட்டு... வார்த்தைகள தேன் தடவி கிறங்க , கிறங்க பேசுற ஆணோ ... பெண்ணோ... எல்லோரும் நல்லங்க கிடையாது...
ஒண்ணு தெரிஞ்சுக்கமா... பருவம் வந்து பழுத்த பழம்தான் ருசியா இருக்கும். மார்க்கெட்ல விலை போகும். பருவம் வர்றதுக்கு முன்னாடியே பழுத்தா... அது மரத்துல தங்காது... உதிர்திடும். அது குப்பைக்குதான் போகும். பருவம் வந்து விளையிறதுதான் பயிராகும். இல்லன்னா வெறும் பதராத்தான் போகும்... அந்த பருவம் விதைச்சவங்களுக்குதான் தெரியும். விதைச்சவங்கள நம்பு... இந்த உலகத்துல தப்பு பண்ணாதவங்கன்னு யாரும் இருக்க முடியாது. ஆனா... அனாவசியமான தப்புகள தவிர்க்க பார்க்கலாம்..."
" ஸார்... நான் இனிமே ஒருபோதும் தப்பு பண்ண மாட்டேன்... தடம் மாறமாட்டேன் ஸார்..."

பின்குறிப்பு: மறுநாள் ஒரு முக்கிய தினசரியில் நாலாம் பக்கத்தில் பெயர் மாற்றங்களுடன் ஒரு பெட்டி செய்தி வெளியாகியிருந்தது. பெண்களை கடத்தும் கும்பல் கைது ...
பெண் கற்பழித்து கொலை ... கடத்தி கொலை... பெண் காதலனுடன் தப்பி ஓட்டம்... இப்படி... ஒரு நாளல்ல... ஒவ்வொரு நாளும் செய்திகள் வெளியாகி கொண்டுதானிருக்கிறது. எங்கோ ஓர் மூலையில் மகன்களையும்... மகள்களையும்... நம்பி கொண்டிருக்கும் அப்பாக்களின்... அம்மாக்களின்... நம்பிக்கையை தூக்கிலிட்டுவிட்டும்... பாசத்தை வேரறுத்துவிட்டும்... சில காதல்கள் இன்னும் ஒடிக்கொண்டுதானிருக்கிறது....

எழுதியவர் : பனவை பாலா (28-Dec-17, 6:11 pm)
சேர்த்தது : பனவை பாலா
பார்வை : 110

மேலே