தேசபக்தியும், மனிதநேயமும் - தொடர்ச்சி3

தமிழ் முத்து எழுத்துகளை அந்தத் தமிழனும் போதிக்க கோதை அவளும் அழகுறக் கற்றுத் தேர்ந்தாள்.

இணையவழி தமிழ் வாசிப்புகள் மேலும் கைகொடுக்க, தமிழ் கற்றுத் தமிழச்சியானாள் அப்பெண் அதீஃபா.

அழகுற தேன் சொட்டு எழுத்துகளில் கோர்வையால் வார்த்தைகள் பூக்களாய் பூத்திருக்க,
கவிமிகு விதைகளில் உள்ளம் கொள்ளை போனாள் அந்த பெண் அதீஃபா.

கலீல் தனியாக நதிக்கரையில் அமர்ந்திருக்க வந்த அதீஃபா, " என்ன சிந்தனை தமிழாசிரியரே? ", என்று அமுதத் தமிழில் கேட்டாள் அதீஃபா.

அதைக் கேட்ட கலீல் புன்னகைத்தவாறு, "
துப்பாக்கிகள் தான் என்செய்யும்?
சிறு தோட்டாக்களும் தான் என்செய்யம்?
எய்பவனின் மனமே தீமைசெய்யும்.
துப்பாக்கிக் குண்டுகள் துளைக்கலாம் இந்த உடலை.
என்றும் மரணிக்காததே எம்முடல்.
ஆன்டவன் தந்த ஆன்ம உடல். ",என்று ஞானவரிகளைப் பொழிந்தான்.

இதயம் நெகிழ்ந்த அதீஃபா, " அழகாக உண்மை நவின்றீர். எம்மொழியிலும் அறியாமையால் பீடித்த மனங்களே கொலைகள் செய்யத் துணிகின்றன.
பயில்வது எம்மொழியானாலும் ஞானம் ஒன்றுதான்.
பிறந்தது எந்நாடானாலும் ஞானம் ஒன்றுதான்.
அன்பால் கருணைமிகு செயல்களை ஆற்றுவதே அந்த ஞானம்.
அறியாதார் ஏற்பதில்லை.
அறிந்தார் பின்பற்றுவதில்லை.
இப்படியே போகிறது இந்த உலக வாழ்க்கை. ",என்று கனிமிகு தமிழில் அதீஃபாவின் கருத்து கலீலின் இதயத்தை நெகிழச்செய்தது.

இப்படியே இருவரும் இதயம் நெகிழ கருத்துகளை வரிகளாக்கி உலக விசாரணையில் அடிக்கடி மூழ்கிப் போய்விடுவர்.

இப்படி நாடு கடந்து, மதம் மறந்து இதயங்கள் கருத்தாடுகையில்,
காஷ்மீர் பகுதியில் கயவர்களின் திட்டம் அரங்கேறிக் கொண்டே இருக்கிறது.

" எந்த சமுதாயத்தில் அமைதி நிலவுகிறதோ அங்கு வாழும் மக்களிடம் அறிவு, ஞானம் வளர்ந்துவிடும். அப்படி அறிவும் ஞானமும் வளர்ந்துவிட்டால் மக்கள் விழிப்படைந்து விடுவார்கள்.
நம்மால் ஏமாற்ற முடியாது. ஆதலால் சமுதாயத்தில் அமைதியே இருக்கக் கூடாது.
அதற்காக மக்கள் எப்போதும் திசை திருப்பப் பட்டுக்கொண்டே இருக்க வேண்டும். ",என்று தன்னிடம் வந்த
இந்துத்துவாத் தலைவரிடம் அறிவுரை வழங்கிக் கொண்டு இருந்தார் அந்த காவிச் சாமியார்.

" என்ன செய்யலாம் சாமி? ",என்றார் அந்த அடிமைத் தலைவர்.

" நமது இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு பணம் கொடுத்து எல்லையில் பிரச்சனையை உண்டு பண்ணிவிடுங்கள். ", என்றார் அந்த சாமியார்.

மறுநாள் காலையில் மூன்று இந்திய இராணுவ வீரர்கள் எல்லைப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்டனரென்ற செய்தி அனைத்துத் தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாக மக்களின் ஆதங்கம் எல்லைப்பக்கம் திரும்புகிறது.

இப்பிரச்சனை குறித்து மக்கள் பேசிக் கொண்டிருக்க, ஊடகங்களும் பரபரப்புரையாற்றி வர,
தமிழகத்தில் வெள்ளை வேஷ்டிகள் ஒரு சதித்திட்டம்
தீட்டுகிறது.

கடற்கரையில் மீனவர்களுக்குள் சில கயவர்களையும் உள்ளிறக்கி, மீனவர்களை எல்லைத் தாண்டி இலங்கை எல்லைப்பகுதிக்குள் நுழையச் செய்து இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொலை செய்யப்படச் செய்கிறது.
இது தொடர்கதையாகி வரும் நிலையில் இந்திய கடற்படை எங்கே போனது? என்ற கேள்வி மட்டுமே என்னிடம் உறுதியானதாக இருக்கிறது.

சிங்கள சகோதரர்களின் அன்பையும், அரவணைப்பையும் அறிந்தவர்களுக்கு இந்த எல்லைப் பிரச்சனையின் சதிகள் புரிபடும்.

இது மட்டுமல்ல, இந்துக்களின் கோவில் திருவிழாவில் முஸ்லீம்கள் கலந்து கொண்டதைக் குறித்து, ஒரு இந்துத்துவா அரசியல் தலைவர் பரப்புரை செய்கிறான் என்றால் அவனுடைய மனதில் இருக்கும் மதவெறி உணர்ந்து கொள்ள முடிகிறது.

காவேரி பிரச்சனை, நதிநீர் இணைப்பு பிரச்சனை, சாதி பிரச்சனை என்று இந்தியாவில் பிரச்சனைகளுக்கு பஞ்சமில்லாமல் போய் கொண்டிருக்கும் நிலையில்,
சூழ்ச்சியறியாத இளம் இதயங்களில் காதல் பூக்கிறது.

அந்தக்காதல் சமுதாயத்தில் நசுக்கப்பட்டும் வருகிறது.

உலக மனிதர்களிடையே காணப்படும் மனவியல் பிரச்சனைகளையெல்லாம் பேசிக்கொண்டிருந்த இந்த கதை முடிவில்லாமல் நீளும்.

ஒரு நாள் காலை நேரம் ஜோசப் நல்ல ஆடைகளை அணிந்து வெளியே கிளம்பக் கண்ட, கணேஷ், " எங்கண்ணே வேகமா கிளம்பி போறீங்க? ",என்றார்.

" சும்மா தான்டா. அப்படியே டவுன் வரை பொய்ட்டு வாரேன். ஹாஸ்பிட்டலைப் பார்த்துக் கோ. ", என்று கூறிவிட்டுச் சென்றார் ஜோசப்.

பேரூந்தில் ஏறிய ஜோசப் சித்ராவைக் கண்டார்.
அவள் தோழிகளோடு கதைத்துக் கொண்டு வந்தாள்.
ஜோசப் சித்ராவைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அவ்வப்போது அவளும் அவரை நோட்டமிட்டாள்.

பேரூந்து நிலையம் வந்தது. ஜோசப் இறங்கி சர்ச்சிற்கு சென்றார்.
சித்ரா தன் கல்லூரிக்குச் சென்றாள்.

இது தொடர்கதையாகி வர, ஒருநாள் பேரூந்தில் அதிகக் கூட்டமாக இருந்தது.
சித்ராவிற்கு பின்னால் ஜோசப் நின்றிருந்தார்.

பேரூந்து கிளம்பிய சிறிது நேரத்தில் யாரென தனது இடுப்பில் கை வைப்பதை போல் உணர்ந்தவள் வேகமாய் திரும்பி ஜோசப்பின் கன்னத்தில் அறைந்தாள்..
" உனக்கு தான் கை இருக்கா? எங்க வேணாலும் கை வைப்பியா? மவனே! வெட்டிடுவேன். ",என்றாள் கோபமாக.

ஜோசப்பின் கைகளிரண்டும் மேல் கம்பிகளைப் பிடித்துக் கொண்டுதான் இருந்தது.
ஆதலால், தன்னை அறைந்தது எதற்காக என்று குழம்பினார்.

பேரூந்து நின்றது.
பக்கத்தில் இருந்தவர், " என்னம்மா ஆச்சு? ", என்றிட, " மேல கை வைக்கிறான் நாய். ", என்று திட்டினாள் சித்ரா.

அதைக்கேட்ட சில ஆண்கள், " ஏன்டா டேய்! பஸ்ஸில் இதற்காகத் தான் வாறியா? ", என்று ஜோசப்பை அடிக்க முற்பட சித்ரா அருகில் இருந்த இருக்கையில் இருந்த பெண்மணி தடுத்தார்.

" தங்கள் மேல்பட்ட கை அவருடையது அல்ல. என் மகளுடையது ", என்று தன் மடியில் இருந்த நான்குவயது குழந்தையைக் காட்டிட, குழந்தை கள்ளம் கபடமில்லாமல் சிரித்தது.

உடனே, சுற்றி இருந்தவர்கள், " ஏம்மா இப்படியா அவசரப்படுவ. அந்த டாக்டர் தம்பி மேல பழியப் போட்டு எங்களையும் அடிக்க வைக்கப் பார்த்தியே ",என்றிட முகம் வெளிறிய சித்ரா மன்னிப்புக் கேட்க டாக்டரைத் தேடினாள்.
அவர் அங்கு இல்லை.
அருகிலிருந்த பெரியவர், " அந்த தம்பி இப்பதான் இறங்கிப் போச்சு. ",என்றார்.

ஜோசப் பஸ்ஸிலிருந்து இறங்கி டவுன் நோக்கி நடந்து சென்று கொண்டிருந்தார்.
பேரூந்து அவரை கடந்தது.

எழுதியவர் : அன்புடன் மித்திரன் (28-Dec-17, 4:45 pm)
பார்வை : 241

மேலே