இயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா --

கட்டியவன் கையைக் கழுவிவிட்டுப் போனபின்னே
தொட்டணைத்தக் காதலின்பம் தொட்டிலிலே பிள்ளையென
மொட்டுவிட்டுப் பூப்பூத்து முன்னூறு நாள்கடந்து
சிட்டவளும் பெற்றெடுக்கச் சிங்காரம் சிந்துமதைப்
பட்டினிகள் கொண்டேனும் பாடுபட்டுக் காப்பாற்றிப்
பட்டப் படிப்பூட்டிப் பார்போற்ற வைக்கும்தாய்
பட்டதுயர் யாவும் பனிபோல் கரைந்துருக
மட்டமாகத் திட்டியோர்முன் மலைபோல் நிமிர்வாளே!

*மெய்யன் நடராஜ்

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (இலங்கை) (30-Dec-17, 2:32 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
பார்வை : 62

மேலே