ஆற்றேலோ ரெம்பாவாய்

பச்சை மயிற்பீலி பாங்காய்த் தரித்தானை
நச்சரவம் மீது நடனம் புரிந்தானை
மெச்சிப் புகழ்பாட மெய்மறந்து கேட்பானை
அச்சுதனை ஆயனை ஆலிலைக் கண்ணனை
இச்சையுடன் போற்றிட யாவரும் சென்றுவிட
பிச்சிப்பூ சூடிய பிள்ளாய்! எழுந்திராய்!
மிச்சம்நீ மட்டும் விழியிமை சாத்தியதேன்?
அச்சோ! இதுதகுமோ? ஆற்றேலோ ரெம்பாவாய் 9.

எழுதியவர் : சியாமளா ராஜசேகர் (1-Jan-18, 10:24 pm)
பார்வை : 35

மேலே