வணங்கேலோ ரெம்பாவாய்
விடிந்த தறிகிலையோ? வேல்விழி யாளே!
துடிக்கு மிமைகளின் சோர்வை விரட்டி
நெடியோன் திருமாலை நெஞ்சில் நினைந்து
கடிதெழுந்து நீராடிக் கண்ணனைக் காண
நொடியில் புறப்படு; நூபுரம் கொஞ்சும்
அடியினைப் போற்றிட ஆவ லுடனே
படியிறங்கி வந்தே பனிவிழும் காலை
வடிவுடை யானை வணங்கேலோ ரெம்பாவாய் !

