வாழ்க்கை சிலகாலம்
தாழ்ந்தோர்கள் நிலையறிந்து தக்கபடி உதவிசெய்து
தன்னலம் கருதாது சகலரையும் உடன்மதித்து
தாலியிட்ட தாரத்தைத் தன்னோடு கரம்சேர்த்து
தறிகெட்டு வாழாமல் தன்வாழ்வை நெறியாக்கு
பாழ்பட்ட உலகத்தில் படிப்பதற்கும் குழந்தைகள்
பண்போடு இருப்பதற்கும் பக்குவமாய் வழிகாட்டு
வாழுகின்ற நாள்கொஞ்சம் வஞ்சனைகள் செய்யாமல்
வாழ்ந்துதான் பார்மனிதா வையம் சிறக்காதா ?
ஆக்கம்
அஷ்ரப் அலி