நாளைய நம்பிக்கை

இது
அன்பிற்கேங்கும் ஏழ்மை மனம்
வஞ்சம் இல்லா இந்நெஞ்சம் தினம்
தனிமை பிடித்து வாழ்வில் சிதைந்து
நித்தமும்
கண்ணீர் வழிகிறேன் கோரம்
தேகம் முழுதும் காயம் படிந்தும்
முகத்தினில்
புன்னகை வழிகிறேன் பாரும்
உழைக்கும் வயதில் உருகி உழைத்திட
உறவுகள் போற்றியதே ஊர்தோறும்
இளமை இழந்து முதுமை அடைந்திட
அடிமையாய் என்னிலை
மாறியதேனோ???
தரைவெளியில் நான் சிறகொடிந்து கிடக்க
சிறைஉலகையே தினம் தினம்
காண்கி்றேன்
அறைமனதுடனே இவ்வுயிரையும்
வாழ்கிறேன்
ஹம்ம்ம்...
இரவும் பகலும் நாளும் மாறும்
என்நிலையும் ஒருநாள் தேறும்
என்கிற நம்பிக்கை ஆண்டவனே
எனக்குத் தாரும்...